தனியுரிமை கொள்கை

தமிழகத்தில் முதன் முதலாக சேவை நோக்கத்திற்காகவே நடத்தப்படும் முதல் திருமண தகவல் மையம்.

மணமக்களின் அனைத்து விபரங்களையும் தாங்களே தீர விசாரித்து கொள்ள வேண்டும் திருமணத்திற்கு பின்பு ஏற்படும் நன்மை தீமைகளுக்கு எங்களது நிர்வாகம் பொறுப்பேற்காது

எங்களது சேவையில் சேவையில் திருமண புரோக்கர்களுக்கு எவ்வித அனுமதியும் இல்லை , யாராவது எங்கள் தகவல் மையத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி பணம் பெற்றால் அவர்கள் மீது சட்ட ரீதியிலான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

இங்கே பதிவுசெய்து பார்வையாளர்களாக இருப்பதற்கு எவ்வித கட்டணங்களும் கிடையாது. உறுப்பினராகி மணமக்களின் அனைத்து விபரங்களையும் பார்க்க விரும்பினால் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.

உங்களை பற்றிய தகவல்களை நீங்களாகவோ அல்லது எங்கள் மூலமாகவே தொலைபேசி மற்றும் வாட்ஸப் மூலம் பதிவு செய்ய இயலும். நீங்களாக பதிவு செய்திருந்தால் தொலைபேசி வாயிலாக உங்களது விபரங்கள் சரிபார்க்க பட்ட பின்னரே உங்களது சுயவிவரம் திரையிடப்படும்

நீங்கள் பதிவிடும் தகவல்களுக்கு நீங்களே முழுப்பொறுப்பு ஆவீர்கள். நீங்கள் பதிவிட்ட தகவல்கள் ஏதேனும் போலியானவை என தெரியவந்தால் உங்களது கணக்கு முடக்கப்படும்

உங்களது சுயவிவரத்தை நீங்களாகவோ அல்லது எங்களிடம் தொலைபேசி அல்லது வாட்ஸப் மூலமாகவோ நீக்கிட இயலும். நீக்கப்பட்ட தகவல்கள் யாருடனும் பகிரடப்பட மாட்டாது.

எங்களது சேவையை தவறாக பயன்படுத்த முயற்சித்தாலோ அல்லது மற்ற பயனாளர்கள் உங்களை பற்றி முறையிட்டாலோ அவை தீர விசாரிக்கப்பட்டு உண்மை நிரூபிக்கப்பட்டால் உங்களது கணக்கு முடக்கப்படும் எனவே கண்ணியமாக நடந்துகொள்ளவேண்டும்.

உங்களது சுயவிவரத்தை பதிவு செய்ய நீங்களாவே அல்லது குடும்ப உறுப்பினராகவோ அல்லது நெருங்கிய உறவினராகவோ இருத்தல் அவசியம் நட்பின் அடிப்படையில் எவருக்கும் பதிவு செய்யவோ அல்லது முஸ்லீம் அல்லது பிறமதத்தினர் பதிவு செய்யவோ கண்டிப்பாக அனுமதி இல்லை .உண்மை தகவல்களை மட்டுமே இங்கே பதிவிட வேண்டும்.

எங்களுடைய தனியுரிமை கொள்கை கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும்